Skip to main content

Posts

Showing posts with the label கவிதைகள்

இமையா விழிகள்

வருடங்கள் பல நிமிடங்களாய் கடந்தாலென்ன, இமைகளில் உன் நினைவு நித்தம் இமைக்க மறக்குதடி... கண்கள் சந்தித்த ஒரு கணமே, கருவிழியில் ராட்டிணமாய் சுழலுதடி... கயல்விழியாள் பார்வை தனில், கணையாழியாய் மாட்டிக்கொண்டேன் மீள தான் வழியில்லை... விழி செய்யும் கதிர்வீச்சிலிருந்து மீளவும் மனமில்லை... கூர்விழியாள் கோபம் தனில், என்னிதயம் குத்தூசியாய் துளைக்குதடி... சொற்கள் எனும் கூர்வாளால், கூறு போட்டாய் இதயம் தனை... வலியும் சுகம் தானே... நீ மடந்தையானால் என் வாழ் நாளும் நரகம் அன்றோ... சிப்பி இதழ் திறவாய் என் சித்திரமே...

குருவி

காதல் குருவி பறந்து சென்றடையும் இடம் தாம் காமமா? காம கழுகு பயணத்தில் காதல் கூட்டை அடைய முடியுமோ? பிறப்புகள் இரட்டையேயெனிலும், கொண்டிருப்பது ஒத்த உணர்வல்லவே... காதலில் கூடலும் இயல்பே எனில்! புணர்ந்து கூடலில் இன்பமும் உண்டோ காதலின் மனதிற்க்கு!? குளிரில் இதமளிக்கும் நெருப்புக்கும், உணர்விழந்த உடலை எரிக்கும் நெருப்புக்கும் உள்ள பற்றே... குறிப்பு : பெண்களையும் குழந்தைகளையும் புணரும் காமுகரை எண்ணுகையில் வாழும் நொடியினை நொந்து இறக்குமாரு தண்டிக்க வல்லவோ தோன்றுகிறது... தன்னிலை உணர காதல் செய் அது உன்னை செம்மை படுத்தும்... உலகில் ஜனிக்கும் புல்லுக்கும் உணர்வழித்திருக்கிறான் இறைவன்... உணர்வை உணர்வு கொள் மானிடா...

வழி

வாழ்க்கை ஒரு நீண்ட வழி பயணமா? குறுகிய வழி பயணமா? என்ற ஆய்வு இருக்க! வழியைத் தேடி திரியும் மானிடம்! உயிரினம் பல வழி உணவாக முடிய! உணவை தேடி வழியோடும் மானிடம்! ஆட்டின் வழி உணவு எனில்! இறக்கவா பிறந்தோமென வினவும் மானிடம்!! வலி தான் வழியோ!?...

காதல் மனம்

காதல் மனதின் நிலை, அழும் குழந்தை நிலேயே... தான் அறியா தன்நிலை, மற்றோர் அறிய கூவலிடும்...

நான் அவள் நிலா...

பௌர்ணமி நிலவுக்கு கறைகளும் அழகுதான் அவள் முக பருக்கள் போல... நிலவின் குளிரில் மகிழ்ந்து கொண்டிருந்தெனக்குத் தெரியவில்லை நாளை முதல் நிலவு மறையத் தொடங்கும் என்று. மறையும் நிலவைக் கண்டு மருகிய தென்ன மூட மனம். புரிந்து கலங்கியதென் மனம், மறைவது நிலவல்ல நிலவினுள் இருக்குமென் முகம்.